தவியாய் தவிக்கும் பிரேமலதா... கேப்டன் ஆரம்பித்த கட்சிக்கு இப்படியொரு பரிதாப நிலையா..?

By Thiraviaraj RMFirst Published Feb 1, 2021, 5:40 PM IST
Highlights

விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிக்காக அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகளும் காத்துக் கிடந்த காலம் மாறி இப்போது அதிமுக- திமுக ஆகிய இரு கட்சியினரும் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது கேப்டன் ஆரம்பித்த தேமுதிக.

கடந்த கால கசப்பான அனுபவத்தால்‘இந்த முறையும் ஏமாறத் தயாரில்லை.. எங்களையும் கூப்பிட்டு பேசுங்க’என தேமுதிக, தேர்தல் கூட்டணிக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது

‘இப்ப வரைக்கும் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். ஜனவரியில் எங்களது முடிவை, கேப்டன் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்பார்’என நவம்பர் தொடக்கத்தில் இருந்தே கதறி வருகிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. ஆனால், மூன்று மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணிக்காக மூன்று முறை நடையாய் நடந்து சந்தித்துப் பேசிய அமைச்சர்கள், தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை. 
 
தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கேட்டு அதிமுக கொஞ்சம் விட்டுப்பிடிக்கும் அரசியல் விளையாட்டை கையில் எடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். அதனால்தான், ’தேமுதிக வந்தாலும் தேவலை. வராவிட்டாலும் கவலை இல்லை’என தனது சகாக்களிடம் எடப்பாடி பழனிசாமி தெளிவாகச் சொல்லிவிட்டாராம். இருந்தும் சென்னையில் ஜனவரி 31-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,‘இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். 

எனவே, கூட்டணிப் பேச்சை உடனே தொடங்குங்கள்’என்று அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்தார்.‘தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம்’ என்று அவர் ஒப்புக்குச் சொன்னாலும், உள்ளுக்குள் உதறல் இல்லாமல் இல்லை. ஆனாலும், ‘சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி’ என்றெல்லாம் பேசி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். ஒரு காலத்தில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிக்காக அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகளும் காத்துக் கிடந்த காலம் மாறி இப்போது அதிமுக- திமுக ஆகிய இரு கட்சியினரும் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது கேப்டன் ஆரம்பித்த தேமுதிக.

click me!