மண் சோறு சாப்பிட்டார் பிரேமலதா விஜயகாந்த்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு

 
Published : Apr 11, 2017, 03:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
மண் சோறு சாப்பிட்டார் பிரேமலதா விஜயகாந்த்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு

சுருக்கம்

premalatha vijayakanth meets farmers in delhi

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 29 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண் சோறு சாப்பிட்டார்.

விவசாயிகள் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 29-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மொட்டை அடித்து உள்ளிட்ட பல்வேறு நூதன போராட்டங்களை தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். 

நேற்று  பிரதமர் அலுகத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனு அளித்த பின்னர் வெளியே வந்த விவசாயிகள் திடீரென ஆடைகளை களைந்து போராடத் தொடங்கினர்.

பிரதமர் அலுவலகம் சென்றபோதும் அவர் விவசாயிகளை பார்க்காததால் வேறு வழியில்லாமல் நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் அலுவலகம் முன்பாக திடீரென தமிழக விவசாயிகள் நிர்வாணமாக ஓட ஆரம்பித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிர்வாணப்போராட்டம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று  ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், விவசாயிகளுடன் இணைந்து மண் சோறு சாப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,விவசாயிகள் இல்லாமல் நாமி யாரும் வாழ முடியாதுஎன தெரிவித்தார். எனவே நாம் அனைவரும் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார்.

போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!