'எங்கள் உரிமையை அதிமுகவிடம் கேட்போம்'..! எம்.பி பதவி கேட்டு முரண்டு பிடிக்கும் பிரேமலதா..!

By Manikandan S R SFirst Published Feb 28, 2020, 12:29 PM IST
Highlights

தேமுதிக கூட்டணி தர்மத்துடன் நடந்து கொள்வதாகவும் இன்னும் இரு தினங்களில் முதல்வர் பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து தேமுதிகவின் உரிமையை கேட்க இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெறுவது தொடர்பாக முதல்வரை விரைவில் சந்திக்க போவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. திமுகவா? அதிமுகவா? என இறுதி வரை தேமுதிக தலைமை மாறிமாறி பேசி வந்த நிலையில் 4 தொகுதிகளுடன் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானது. அப்போது தேமுதிகவிற்கு மாநிலவங்களையில் ஒரு எம்.பி பதவி கொடுப்பதாக அதிமுக கூறியுள்ளது. ஆனால் அதுகுறித்து ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. 

பாமகவிற்கு மாநிலங்களவை பதவி கொடுப்பது குறித்து கூட்டணி ஒப்பந்தத்தில் இருகட்சிகளும் கையெழுத்திட்டிருந்தனர். அதன்படி பாமகவிற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டு அதிமுக தயவில் அன்புமணி எம்.பி ஆனார்.  இதனிடையே தற்போது தமிழகத்தின் சார்பாக 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. அவற்றில் திமுகவும் அதிமுகவும் தலா 3 உறுப்பினர்களை பெறும் சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் தான் தற்போது அதிமுகவிடம் தேமுதிக ஒரு இடத்தை கேட்டுள்ளது. ஆனால் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுக்க அதிமுக மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாட்களில் எம்.எல்.ஏக்கள் தொடர் மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த திமுக..!

இதனிடையே இன்று சென்னையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக அதிமுக தலைமை கூறியதாக தெரிவித்தார். தேமுதிக கூட்டணி தர்மத்துடன் நடந்து கொள்வதாகவும் இன்னும் இரு தினங்களில் முதல்வர் பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து தேமுதிகவின் உரிமையை கேட்க இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

'2 எம்.எல்.ஏக்களை இழந்து பேரிழப்பில் இருக்கிறேன்'..! கலங்கிய ஸ்டாலின்..!.

click me!