திமுகவிற்கு ஆட்கள் பலம், அதிகார பலம், பணபலம் இருப்பதால் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள். எனவே பொதுமக்கள் அன்று விரைந்து வாக்களிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடவுள் ஏன் இப்படி செய்தார்.?
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதனையடுத்து தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பரப்பரை மேற்கொண்டார். . அப்போது பேசிய அவர், கேப்டன் கூடவே வந்த நான் இன்று கேப்டன் இல்லாம வந்துள்ளேன். ஏன் கடவுள் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்? கேப்டன் இல்லாதது மனசு வலிக்குது என வேதனையாக பேசினார்.
திமுக கள்ள ஓட்டு போட்டுறுவாங்க..
டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. படித்த இளைஞர்களுக்கும் வேலை இல்லை. மின்கட்டண உயர்வு கடுமையாக உள்ளது. பெண்களுக்கு உரிய வகையில் மகளிர் உதவி தொகையும் வழங்கவில்லையென தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இங்கு போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்கள் மீது அதிக வழக்குகள் இருப்பதாகவும்,
ஆனால் சிவனேசன் நல்ல வேட்பாளர் எனவே அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுமக்கள் விரைந்து வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு ஆட்கள் பலம், அதிகார பலம், பணபலம் இருப்பதால் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள். எனவே பொதுமக்கள் அன்று விரைந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை தமிழனே இல்லை.. பாஜக ஓட்டு நோட்டாவுக்கு கீழே தான்.. பிரச்சாரத்தில் பிச்சு எடுத்த கனிமொழி!