பிரேமலதா ஏமாற்றம்... பாஜக மிரட்டலுக்கு பணிந்து ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கிய எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Mar 9, 2020, 1:01 PM IST
Highlights

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவி காலியாகிறது. இவர்களுக்கு பதில் புதிதாக 6 எம்.பி.க்களை தமிழக எம்எல்ஏக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனுக்கு சீட் தரப்பட்ட நிலையில் தேமுதிக பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தும் சீட் வழங்கப்படாததால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவி காலியாகிறது. இவர்களுக்கு பதில் புதிதாக 6 எம்.பி.க்களை தமிழக எம்எல்ஏக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோ ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிடும் 3 பேர் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. காரணம், அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க அதிமுக கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டது. மறுபுறம், கூட்டணி கட்சியான தேமுதிக மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார்.

அதேபோன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் மாநிலங்களவை சீட் கேட்கிறார். அவருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்க பாஜகவும் அதிமுக தலைமையிடம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முரளிதரராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இது குறித்து பேசியதாகவும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான தம்பிதுரைக்கும், ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமிக்கும், அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை சீட் ஒதுக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

click me!