க.அன்பழகனை வரிக்குவரி புகழ்ந்த சபாநாயகர் தனபால்..!! சட்டப்பேரவையில் நெகிழ்ச்சி...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2020, 12:51 PM IST
Highlights

பட்ஜெட் மீதான விவாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது . இதில்  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெறாத நிலையில் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .  

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மொழி உரிமைக்காகப் போராடியவர் ,  ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர் எளிமையின் உருவம் என தமிழக சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டியுள்ளார் .  நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு  கூடியது ,  இதில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது .   தமிழக அரசின் 2020-2001 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 14ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் மீதான விவாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது . இதில்  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெறாத நிலையில் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .  இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல்  9 தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .  அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் இரண்டாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது . கூட்டம் தொடங்கியதும் திமுக பொதுச்செயலாளர் மற்றும்  9 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான க. அன்பழகன் மற்றும் மறைந்த திமுக எம்எல்ஏக்கள் கேபிபி சாமி ,  காத்தவராயன் ,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. சந்திரன் , ஆகியோரின் மறைவுக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இரங்கல் செய்தி வாசித்தார் .  அப்போது கூறிய சபாநாயகர் தனபால் ,  க. ஆன்பழகனுக்கு புகழாரம் சூட்டினார் . அதில் , 

அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்தவர் பேராசிரியர் க. அன்பழகன் ,  மொழி உரிமைக்காகப் போராடியவர் ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை  நடைபெற உதவியவர் .  அவையில் எதிர்க்கட்சியினருக்கு ஏற்றவகையில் ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்து பேசியவர் . மக்கள் நலவாழ்வு  துறை ,  கல்வி மற்றும் நிதி அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் அன்பழகன் .   எளிமை ,  அடக்கம் ,  என எளிமையாக வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன் .  அவரது  மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என அவர் கூறினார் .  மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டதுடன்  அதில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
 

click me!