இதெல்லாம் மகனை மதியுக அரசியல்வாதியாக மாற்றிட ஸ்டாலின் கொடுக்கும் பயிற்சிகளும், பரீட்சைகளும்.உதய் சக்ஸஸ் செய்யுறாரான்னு பார்ப்போம்.”
நம்ம ஆட்சி இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே ஓடும்லா! அதுக்குள்ள கல்லணைக்கு ஈக்குவலா பெரிய கல்லா கட்டிடுவோம்லே. என்ன அண்ணாச்சி சொல்லுதீய?!’ என்று ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் கலெக்ஷனில் கனகச்சிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2021 தேர்தலை பற்றி அவர்களுக்கு எந்த யோசனையுமில்லை. ஆனால் தி.மு.க.வோ இப்போதே அத்தனை கட்டமைப்பு வேலைகளையும் துவக்கிவிட்டது தேர்தலுக்காக: என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். விளக்கமா சொல்லுங்க தல! என்று கேட்டபோது.....”2021 தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் எனும் கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டு ஐபேக் எனும் அரசியல் கன்சல்டன்ஸியின் பிரஷாந்த் கிஷோர் தி.மு.க.வோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக அக்கட்சிக்காக ஐபேக் நிறுவனம் உழைக்க துவங்கிவிட்டதாம்.
undefined
சர்வேக்கள், ரகசிய தகவல் திரட்டல்கள், ரகசிய தகவல் பரப்பல்கள் என்று பல வகைகளில் தமிழகத்தின் சந்து பொந்துகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளது அந்நிறுவனம். இந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பு ரீதியிலும் பல மாற்றங்களை உருவாக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அதையும் அப்படியே மறுப்பின்றி நிறைவேற்றுகிறாராம் ஸ்டாலின். உட்கட்சி தேர்தல் அறிவிப்பு, மேற்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம், வீரபாண்டியாரின் மகன் டம்மியாக்கப்பட்ட செயல்! என எல்லாமே கிஷோரின் அஸைன்மெண்டுகள்தான். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆர்டரை ஸ்டாலினுக்குப் போட்டிருக்கிறாராம் பி.கே. அதன்படி அ.தி.மு.க.விலிருந்து சில நபர்களை தி.மு.க.வுக்கு நகர்த்தி வரச் சொல்லியிருக்கிறார்.
அக்கட்சி தலைமை மீது அதிருப்தியாக இருக்கும் நபர்கள் அவர்கள். அந்த நிர்வாகிகள் தி.மு.க.வினுள் வந்தால் சில நன்மைகள் இவர்களுக்கு கிடைக்கும்! என்பதே கணக்கு. பிரசாந்த் கிஷோரால் போடப்பட்ட லிஸ்டில் இருக்கும் நபர்கள் இவர்கள்தான்.... மாஜி சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. தலைமையோடு மல்லுக்கட்டும் அன்வர் ராஜா, வாய்ப்புகளின்றி ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழ்மகன் உசேன், மாஜி அமைச்சர் சண்முகநாதன், மாஜி அமைச்சர் புத்திச்சந்திரன், இது போக பன்னீர்செல்வத்தின் டெல்லி மனசாட்சியாக இருந்து பின் அவராலேயே ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட மைத்ரேயன்! இவர்கள்தான் இந்த லிஸ்டில் இருக்கும் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள். பிரசாந்த் கிஷோர் கொடுத்திருக்கும் இந்த லிஸ்டில் உள்ள நபர்களை பக்குவமாக பேசி, நேர்த்தியான உறுதிமொழிகளை கொடுத்து, தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் மனக்கஷ்டம் இல்லாதபடி உள்ளே கொண்டு வரும் ஒட்டுமொத்த பொறுப்பையும் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.
இதெல்லாம் மகனை மதியுக அரசியல்வாதியாக மாற்றிட ஸ்டாலின் கொடுக்கும் பயிற்சிகளும், பரீட்சைகளும்.உதய் சக்ஸஸ் செய்யுறாரான்னு பார்ப்போம்.” என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வின் இந்த மூவ்களை அறிந்துவிட்ட அ.தி.மு.க.வினரோ ’தேய்ஞ்சு போன கண்ணாடியை திருப்புனா எப்படிய்யா ஆட்டோ ஓடும்?’ என்கிறார்கள். அவ்வ்வ்.......