எங்களைவிட்டால் வேறு வழியேயில்லை.. கமல்ஹாசன் வேறுநாட்டிற்தான் போகணும்.. ரவுசுகாட்டும் ராஜேந்திர பாலாஜி..!

By vinoth kumarFirst Published Feb 29, 2020, 6:03 PM IST
Highlights

திமுக, அதிமுக மற்றும் ஊழல் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்த கமல்ஹாசன், ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்தார். ரஜினிகாந்தும் நானும் தமிழ்நாட்டின் மேம்பாடு என்பதைத் தான் பேசிவருகிறோம்.

அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நகர்ப்புறங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றார். உள்ளாட்சித் தேர்தலை அக்கட்சி புறக்கணித்தாலும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ரஜினிகாந்தும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கி களமிறங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதும் அதன்பின் கட்சி தொடங்குவது குறித்து அவர் வெளிப்படையாக பேசவில்லை. கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தேவைப்பட்டால் ரஜினியுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறினார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொருளாதார திட்ட அறிக்கையை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக, அதிமுக மற்றும் ஊழல் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்த கமல்ஹாசன், ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்தார். ரஜினிகாந்தும் நானும் தமிழ்நாட்டின் மேம்பாடு என்பதைத் தான் பேசிவருகிறோம். அதில் கொள்கை ரீதியான மாறுபாடு இருக்கலாம் என்பதெல்லாம் பரவலாக இருக்கக்கூடிய பேச்சு. ஆனால் சமீபத்தில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கிய அணி சாரா நிலை இருப்பதாக உள்ளது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது என்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;-  அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார். 

click me!