ரஜினியும் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். அவர் பா.ஜ.க.வின் ஊதுகுழல், அப்படித்தானே பேசுவார். முஸ்லிம்களுக்கு ஆதரவு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! என்றார். வண்ணாரப்பேட்ட்டையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தானே! எங்கே போனார் ரஜினி?
சிஏஏ! எனப்படும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் கடும் போராட்டங்களால் செமத்தியாக விமர்சனத்துக்கு உள்ளாவது மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமில்லை. நம்ம சூப்பர் ஸ்டாரும் தான். வெச்சு செய்யுறாங்க தலைவரை. அதுவும், தெளியத் தெளிய அடிப்பதுதான் சூப்பருக்கு எதிரான சுளீர் ஆபரேஷனாக இருக்கிறது. ஏன் இந்த அடி?....சமீபத்தில் ‘கதவை திறந்து வெளியே வந்த’ ரஜினிகாந்த் குடியுரிமை சட்ட மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையுமில்லை! அப்படின்னு ஒரு ஸ்டேட்மெண்டை விட்டு, அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் வெளிப்பாடுதான் இந்த அடி.
undefined
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் போராட்டத்தில் பெரும் பிரச்னைகள் எழுந்தபோது மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட மனிதர்களில் ரஜினிக்கு மிக முக்கிய இடம் இருப்பதை கவனிக்க வேண்டும். சூழல் இப்படி இருக்கும் நிலையில், எஸ்.டி.பி.ஐ.க் கட்சியின் தமிழக தலைவரான நெல்லை முபாரக்கும் தன் பங்குக்கு ரஜினியை நார் நாராய் கிழித்திருக்கிறார் இப்படி....”முதல்வர் எடப்பாடியாரின் பேச்சு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. வண்ணாரப்பேட்டை தாக்குதல் சமயத்தில் சட்டமன்றம் கூடவிருந்ததால்தான் அவசரமாக நேரம் கேட்டு அவரை சந்தித்தோம். அப்போது சிஏஏவினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவரிடம் விளக்கினோம். அப்போது சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது போலவே எங்களிடம் முதல்வர் பேசினார்.
ஆனால் மறுநாள் சட்டசபையிலோ, எங்களிடம் பேசியதற்கு நேர் எதிராக நடந்து கொண்டார். அதுமட்டுமின்றி, போராடும் மக்களை ஏதோ சமூக விரோதிகள் போல் அவர் சித்தரித்துப் பேசியது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ரஜினியும் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். அவர் பா.ஜ.க.வின் ஊதுகுழல், அப்படித்தானே பேசுவார். முஸ்லிம்களுக்கு ஆதரவு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! என்றார். வண்ணாரப்பேட்ட்டையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தானே! எங்கே போனார் ரஜினி? இதே போல்தான் ஸ்டெர்லைட் விவகாரத்திலும், போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று பேசினார். ஏதோ ஒரு சில சில்லரை சலுகைகளுக்காக ரஜினி இப்படியெல்லாம் பேசுகிறார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல, வெறும் ஜீரோ ஸ்டார்.” என்றிருக்கிறார்.
கேக்குதா தலைவரே!?