பீகாரில் புது இயக்கம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்..! அப்போ திமுகவின் நிலை..?

By Selva KathirFirst Published Feb 19, 2020, 10:43 AM IST
Highlights

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகாரை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவில் சில நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு பிரதமர் மோடிக்காக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்ற பிரசாந்த் கிஷோர் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளராகி மோடி, நிதிஷ்குமார், ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் தற்போது ஸ்டாலின் என முக்கிய தலைவர்களுக்கு பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் திமுகவிற்காக தேர்தல் வியூகம் அமைத்து களமாட ஒப்புக் கொண்ட பிரசாந்த் கிஷோர் பீகாரில் புதிய இயக்கம் தொடங்கியுள்ளார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகாரை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவில் சில நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு பிரதமர் மோடிக்காக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்ற பிரசாந்த் கிஷோர் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளராகி மோடி, நிதிஷ்குமார், ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் தற்போது ஸ்டாலின் என முக்கிய தலைவர்களுக்கு பணியாற்றி வருகிறார்.

தேர்தல் வியூக வகுப்பாளராக இதுநாள் வரை செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோருக்கு நீண்ட நாட்களாகவே அரசியல் களம் புக வேண்டும் என்கிற ஆசை உண்டு. இதனால் தான் பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவர் இணைந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் பீகார் அரசியலில் ஆர்வம் காட்டாமல், தேர்தல் வியூக வகுப்பாளர் வேலையில் அவர் பிசியாக இருந்து வந்தார்.

இதற்கிடையே நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிதிஷ்குமாரை மிக கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். மேலும் பீகாரை இந்தியாவின் சிறந்த 10 மாநிலங்களுக்குள் ஒன்றாக மாற்ற ஒரு இயக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். பாட் பிகார் கி எனும் பெயரில் அந்த இயக்கம் செயல்படும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை திரட்டி நிதிஷ்குமாரை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். அதன் பிறகே தேர்தல் அரசியல் என்று கூறப்படுகிறது. இன்னும் 6 மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இதனால் அந்த பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் திமுகவுடன் தேர்தல் பணிகளுக்காக பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்ட நிலையிலும் தற்போது வரை தமிழகத்திற்கு அவர் வரவில்லை.

பீகார் தேர்தல் முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கு வர பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறாக்ள்.அதுவரை அவரது பணியாளர்கள் தான் இங்கு திமுகவிற்காக வேலை பார்க்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் தன்னுடைய இயக்கத்திற்கு தான் பிரசாந்த் கிஷோர் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு அதிகம் என்பதால் திமுகவிற்கான பிரசாந்த் கிஷோரின் பணிகள் இரண்டாம் பட்சமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

click me!