CAA வால் பாதிக்கப்பட்டதை நிரூபித்தால் 1கோடி பரிசு.!! திடீர் போஸ்டரால் திக்குமுக்காடும் திமுக.!!

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2020, 10:40 AM IST
Highlights

இந்திய குடியுரிமைச்சட்டத்தால் இந்திய குடிமகன்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு நிரூபித்தால் அவர்களுக்கு 1கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சென்னையில் பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். இந்த போஸ்டர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

T.Balamurukan

இந்திய குடியுரிமைச்சட்டத்தால் இந்திய குடிமகன்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு நிரூபித்தால் அவர்களுக்கு 1கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சென்னையில் பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். இந்த போஸ்டர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக அரசு சட்டசபையில் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்த 6நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இன்று சட்டசபையை முற்றுகையிடப்போவதாக இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சுமார் பத்தாயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது. தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் போராட்டக்காரர்களை கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடியுரிமைச்சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு வராது என்று சட்டசபையில் முழங்கியிருக்கிறார். இந்த நிலையில் சட்டசபையில் எப்படி குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்கிற கேள்வில் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


இந்திய மக்கள் தொகை பதிவேடு முறையை என் மக்களை பாதிக்கும் அதை நான் நிறைவேற்ற விட மாட்டேன் என்று மார்பு தட்டிய மராட்டிய மாநில முதலைமைச்சர் உத்தவ்தாக்கரே பாஜக விடம் சரண்டர் ஆனது தனிக்கதை.
இந்த நிலையில் சென்னையில் பாஜகவினர் இந்திய குடியுரிமைச்சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நிரூபித்தால் 1கோடி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது இஸ்லாமியர்களுக்கும் எதிர்கட்சியனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

click me!