தனது பழைய திருமண படங்களை வெளியிட்டார் பிரியங்கா காந்தி.! தொண்டர்களை உற்சாகப்படுத்திய திருமணப்படங்கள்.

Published : Feb 19, 2020, 09:33 AM ISTUpdated : Feb 19, 2020, 09:37 AM IST
தனது  பழைய  திருமண படங்களை வெளியிட்டார் பிரியங்கா காந்தி.! தொண்டர்களை உற்சாகப்படுத்திய திருமணப்படங்கள்.

சுருக்கம்

இந்தியாவின் அடுத்த பிரதமர் என காங்கிரஸ் கட்சியினரால் வர்ணிக்கப்படும் ப்ரியங்கா காந்தி ,தனது திருமண நாளை மலரும் நினைவுகளோடு சந்தோசத்தில் தன்னுடைய திருமணம் நடந்த போது எடுத்த புகைப்படத்தையும்,தன் கணவர் ராபர்ட் வதேராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

T.Balamurukan

 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி பிரியங்கா, ராபர்ட் வதேரா திருமணம் நடைபெற்றது. அந்த தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.பிரியங்கா மலரும் நினைவுகள்இதையொட்டி மலரும் நினைவுகளை பிரியங்கா காந்தி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுகள் இன்று.... என்றென்றும்...” என நெகிழ்ந்துள்ளார்.திருமண காட்சி, தாயார் சோனியா, சகோதரர் ராகுல் காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, குழந்தைகள் ரைஹான், மிராயா மற்றும் நாய்குட்டிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களையும் பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார். இந்த படங்கள சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!