பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்த ஆம்ஆத்மி.!! என்ன செய்ய போகிறார் பிரசாந்த்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2020, 9:35 PM IST
Highlights

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவராக பிரபல தேர்தல் பிரச்சாரத் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இருந்தார். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக அவருக்கும், கட்சி தலைவர் நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பிரசாந்த் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

T.Balamurukan
 ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவராக பிரபல தேர்தல் பிரச்சாரத் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இருந்தார். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக அவருக்கும், கட்சி தலைவர் நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பிரசாந்த் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


 
பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், ' கொள்கை ரீதியாக முரண்பாடு ஏற்பட்டதால் தனக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் வெடித்தது, மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்தே எனக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. முதலில் கொள்கை ரீதியாக பிரச்னை ஏற்பட்டது. இரண்டாவதாக சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எப்படி ஒரே நேரத்தில் மகாத்மா காந்திக்கும், கோட்சேவுக்கும் நிதிஷ் ஆதரவு அளிப்பார் என்று கேட்டேன். இப்படி இரட்டை நிலைப்பாட்டில் இருக்கக் கூடாது.' என்று கூறினார். 

இதற்கிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சார ஆலோசகராக  பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. இந்த நிலையில் டெல்லி அரசின் செயல்பாடுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

"பிரசாந்த கிஷோர் விரும்பினால் ஆம் ஆத்மியில் சேர்ந்து கொள்ளலாம். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. கட்சியில் சேர்வது குறித்து பிரசாந்த் கிஷோர் தான் முடிவு எடுக்க வேண்டும்.அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப்பு டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகிறார். டெல்லி அரசின் செயல்பாடுகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. மெலானியா டெல்லி அரசுப்பள்ளிக்கு வருவதை நாங்கள் கவுரவமாக எண்ணுகிறோம். டெல்லி அரசின் மொஹல்லா மருத்துவமனை திட்டத்தை மற்ற மாநிலங்கள் பல ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவுள்ளன. எங்களது கல்வி திட்டத்தை மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் அரசுகள் பாராட்டியுள்ளன. இதேமுறையை தங்களது மாநிலங்களில் செயல்படுத்தவும் அவை விருப்பம் தெரிவித்திருக்கின்றன. 


 

click me!