7 பேர் விடுதலையில் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் பூஜ்ஜியம்... மத்திய அரசுக்கு எதிராக சீறிய சி.வி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Feb 22, 2020, 6:14 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி  தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால், அந்த  பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இயற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்ததற்கு சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி  தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால், அந்த  பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் வாதிடுகையில்;- மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய மாநில அரசு, மத்திய அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டபேரவையில் அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தற்போது நடைபெறும் அதிமுக அரசின் அமைச்சரவை தீர்மானம் என்பது மத்திய அரசு ஏற்றுகொள்ளாதவரை பூஜ்ஜியத்திற்கு சமமானது என்றார். 

இந்நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசின் 3-ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வரம்பை மீறி பேசி இருக்கிறார். இந்தக் கருத்தை அவர் தெரிந்தே சொன்னாரா என்று தெரியவில்லை. 

மத்திய அரசின் கீழ் வரும் குற்றங்களுக்கு மத்திய அரசினுடைய அனுமதியைப்பெற வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதில், ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். இதில் மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க முழு உரிமை ஆளுநருக்கு உள்ளது என ஆவேசமாக பேசியுள்ளார்.

click me!