ஸ்டாலினை புகழ்ந்து கொட்டிய அமைச்சர்! கொதிக்கும் எடப்பாடியார்: அ.தி.மு.க.வில் அமளிதுமளி

By Vishnu PriyaFirst Published Feb 22, 2020, 6:11 PM IST
Highlights

இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆளும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மிக மூர்க்கமாக  மோதிக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முலம் இரு கட்சிகளும் ஒருவரின் மேல் ஒருவர் குற்றச்சாட்டு குண்டுகளையும், புகார் புஸ்வாணங்களையும் தாறுமாறாக கொளுத்திக் கொண்டுள்ளன. 
 

இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆளும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மிக மூர்க்கமாக  மோதிக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முலம் இரு கட்சிகளும் ஒருவரின் மேல் ஒருவர் குற்றச்சாட்டு குண்டுகளையும், புகார் புஸ்வாணங்களையும் தாறுமாறாக கொளுத்திக் கொண்டுள்ளன.
 
குறிப்பாக சி.ஏ.ஏ. விவகாரத்தில் இஸ்லாமிய மக்களை எதிர்க்கட்சிகள் வீணாக தூண்டிவிடுவதாக மிக கடுமையான விமர்சனத்தை அ.தி.மு.க.வினர் வைத்து வருகின்றனர். இந்த சூழலில் அ.தி.மு.க. அமைச்சரவையின் முக்கிய நபரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசிய டயலாக் ஒன்று முதல்வரையே அதிர வைத்திருக்கிறது! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

அப்படி என்ன பேசிவிட்டார் ஆர்.பி.யு?

அதாவது தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றி எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஒரு பகீர் விமர்சனத்தை வைத்தார். இதற்குப் பதில் தந்து பேசிய அமைச்சர் உதயகுமார்....

”தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பண்டிகை குறித்து எதுவும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரும் (ஸ்டாலின்), துணைத்தலைவரும் (துரைமுருகன்) மக்களுக்காக பாடுபடுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக ஓட்டு வங்கியை மையமாக வைத்து, விஷ விதையை தூவ வேண்டாம்.” என்று சொன்னார். 

ஆர்.பி.யு.வின் இந்த வார்த்தைகள்தான் முதல்வரை அதிர வைத்துவிட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, ஸ்டாலின் தரப்புக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை விட்டுவிட்டு ‘எதிர்க்கட்சி தலைவர் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார்!’ என்று சொல்வது மிக மோசமான விஷயம். ஆளுங்கட்சி அமைச்சரே பாராட்டுகிறாரே என்றுதானே மக்கள் மனதில் ஸ்டாலின் பற்றிய உயர்ந்த எண்ணம் பதியும்! இதை எப்படி உதயகுமார் பேசியிருக்கலாம்? 

இவர் இப்படி பேசியதும், ராஜேந்திர பாலாஜி ‘சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும்’ என்று சொல்லியதும் ஒன்றேதான். இரண்டுக்கும் வித்தியாசமில்லை. இந்த அமைச்சர்கள் என்னை என்னதான் நினைக்கிறார்கள்? போன தடவை அமைச்சர்களோடு கலந்தாய்வு செய்தபோது சொன்னது போல், பேசாமல் ஆட்சியை கலைத்துவிட்டு போகட்டும். எனக்கு எந்த கவலையுமில்லை! கொஞ்சம் நிலம் இருக்குது, ஏர் இருக்குது, விதை இருக்குது, உழைக்க என்னிடம் தெம்பு இருக்குது! என்று கொதித்திருக்கிறார் முதல்வர்.” என்கிறார்கள். 

ஆனாலும் இந்த ஆர்.பி.யு.வுக்கு இவ்வளவு குறும்பு ஆகாதுய்யா!
 

click me!