அவர் கால்ல முள் குத்திடுச்சி... தூத்துக்குடி வர முடியாது... ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி

Published : Feb 22, 2020, 05:51 PM IST
அவர் கால்ல முள் குத்திடுச்சி... தூத்துக்குடி வர முடியாது... ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி

சுருக்கம்

ரஜினிக்கு அவரது காலில் முள் குத்தியதால் தூத்துக்குடிக்கு வர முடியாது என கருத்து தெரிவித்து நையாண்டி செய்து வருகின்றனர் வருகின்றனர் நெட்டிசன்கள்.

ரஜினிக்கு அவரது காலில் முள் குத்தியதால் தூத்துக்குடிக்கு வர முடியாது என கருத்து தெரிவித்து நையாண்டி செய்து வருகின்றனர் வருகின்றனர் நெட்டிசன்கள்.

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்" என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு "சமூக விரோதிகளே காரணம்" என்றும் கூறினார். ரஜினியின் இந்த கருத்து பலத்த விமர்சனத்தைப் பெற்றது. இதனை அடுத்து, தூத்துக்குடி போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாகவும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணை தொடர்பாக,அவர் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் தர நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதியன்று அவர் ஆணையத்தில் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேரடியாக தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்க, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை எழுத்து வடிவில் சமர்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் #தொடைநடுங்கி_ரஜினி என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது எதிர்ப்பாளர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  அதில் அவரது காலில் முள் குத்தியதால் தூத்துக்குடிக்கு வர முடியாது என கருத்து தெரிவித்து நையாண்டி செய்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!
என் உத்தரவை யாரும் மதிக்கலை... பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்