காங்கிரஸே காணாம போயிடுச்சு.. இவருலாம் எம்மாத்துரம்..? பாஜகவுக்கு எதிராக காட்டு கத்து கத்துன பிரகாஷ் ராஜ் கதி என்ன தெரியுமா..?

By karthikeyan VFirst Published May 23, 2019, 4:24 PM IST
Highlights

தனது சினிமா பிரபலத்தையும் பிரதமர் மோடியை சில முறை விமர்சித்து பாஜக எதிர்ப்பாளராகவும் தன்னை காட்டிக்கொண்டதை நம்பி களம் கண்ட பிரகாஷ் ராஜ் படுமோசமாக தோல்வியடைந்துள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைய உள்ளது. 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

தேர்தல் நடந்த 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 94 மற்றும் மற்ற கட்சிகள் 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை விட அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. 

பாஜகவை கடுமையாக எதிர்த்த கட்சிகளில் திமுகவை தவிர தேசிய அளவில் மற்ற அனைத்து பிராந்திய கட்சிகளும் மண்ணை கவ்வியுள்ளன. பிரதமர் மோடிக்கும் பாஜக ஆட்சிக்கும் எதிராக அதிகமாக கூக்குரலிட்ட சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பாஜகவை வீழ்த்த கூட்டணி அமைத்த அகிலேஷ்-மாயாவதி ஆகியோர் பாஜகவிற்கு கிடைத்துள்ள மக்களின் அங்கீகாரத்தை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு நிகராக பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் டிஎம்சி 22 தொகுதிகளிலும் பாஜக 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல உத்தர பிரதேசத்தில் மாயாவதியும் அகிலேசும் கூட்டணி அமைத்தும் கூட பாஜகவை அசைக்கமுடியவில்லை. 

இவ்வாறு இருக்கையில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் ஆகியோருக்கு நிகராக மோடியையும் பாஜக ஆட்சியையும் விமர்சித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். டுவிட்டரில் பிரதமர் மோடியையும் அவரது தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல், தேர்தலில் களமும் கண்டார். 

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார் பிரகாஷ் ராஜ். தனது சினிமா பிரபலத்தையும் பிரதமர் மோடியை சில முறை விமர்சித்து பாஜக எதிர்ப்பாளராகவும் தன்னை காட்டிக்கொண்டதை நம்பி களம் கண்ட பிரகாஷ் ராஜ் படுமோசமாக தோல்வியடைந்துள்ளார். அவர் போட்டியிட்ட பெங்களூரு மத்திய தொகுதியில் பாஜக வேட்பாளர் பிசி.மோகன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பிசி மோகன் வெற்று பெறுவது உறுதியாகிவிட்டது. 

பிரதமர் மோடியையும் பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியே மூன்று டிஜிட் தொகுதிகளை கைப்பற்றவே முக்குகிறது. மோடியை கடுமையாக விமர்சித்த பெரிய பெரிய பிராந்திய கட்சிகளே சுருண்டு கிடக்கின்றன. பிரகாஷ் ராஜெல்லாம் எம்மாத்திரம்...
 

click me!