மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா.. தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்..!

Published : Apr 16, 2021, 07:03 PM ISTUpdated : Apr 16, 2021, 07:08 PM IST
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா.. தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்..!

சுருக்கம்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக் விஜய் சிங், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 3 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!