நடிகர் விவேக் உடல்நிலை... 24 மணி நேரம் கெடுவிதித்த மருத்துவமனை..!

Published : Apr 16, 2021, 05:45 PM IST
நடிகர் விவேக் உடல்நிலை... 24 மணி நேரம் கெடுவிதித்த மருத்துவமனை..!

சுருக்கம்

விவேக்கிற்கு 100 சதவீதம் இதயத்தில் அடைப்பு உள்ளது.ஆஞ்சியோ சிகிச்சை செய்து அடைப்பு நீக்கப்பட்டது எனினும் அவர் ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளார்.24 மணி நேரம் கழித்தே சொல்ல முடியும்.

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை ஷூட்டிங் ஒன்றை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது.

மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட விவேக், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்த மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடுவோம் என கூறியிருந்தது. அதன் படி, தற்போது விவேக்கின் உடல்நிலை மருத்துவமனை நிர்வாகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது.

அதில், முற்பகல் 11 மணிக்கு சுய நினைவின்றி மருத்துவமனைக்கு விவேக் கொண்டு வரப்பட்டார். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். இது சாதாரண கார்டியாக் அர்ரெஸ்ட் தான். இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி ஏதும் மில்லை என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை
எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்