Urban Local Election: தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்? எப்போது தெரியுமா? காரணம் இதுதான்?

Published : Dec 06, 2021, 11:33 AM IST
Urban Local Election: தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்? எப்போது தெரியுமா? காரணம் இதுதான்?

சுருக்கம்

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வார்டு மறுவரையறை செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

வடகிழக்கு பருவமழை, புதிதாக உருவாகியுள்ள ஒமிக்ரான் வைரஸ் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ம் ஆண்டில் நடைபெற்றது. இதனையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு புதியதாக பிரிக்கப்பட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில்  சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வார்டு மறுவரையறை செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், விரைவில் நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனிடையே, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பொதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வெள்ளத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். மறுபுறம் புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஒமிக்ரான் வைரஸ் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நகராட்சி தேர்தலை இந்த சமயத்தில் வைத்தால் சரியாக இருக்காது என மூத்த அமைச்சர்கள் அவரவர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நகராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3வது வாரத்தில் வெளியிட முடிவி எடுக்கப்பட்டுள்ளதாக கவல்கள் வெளியாகியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?