சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு - சென்னை முழுதும் போஸ்டர் மயம்

 
Published : Dec 11, 2016, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு - சென்னை முழுதும் போஸ்டர் மயம்

சுருக்கம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தி செல்ல சசிகலா அக்கட்சியின் பொதுசெயலாளராக பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள்,கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வையுருது வருகின்றனர்.

அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலா தான் கழகத்தையும் மக்களையும் காக்க வேண்டியவர் என பத்திரிக்கைகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

"போற்றி வளர்த்த இந்த இயக்கத்தை அம்மா வழியில் தலைமையேற்க வாருங்கள் எங்க சின்னம்மாவே"

"அம்மாவுக்கே தாயை தந்தையாய் சகோதரியாய் யாதுமாகி நின்று தாயை காத்திட்ட எங்களின்  இளைய தாயே.. கழகத்தை காத்தருள வேண்டும்"

ஒரு பொழுதும் உண்ணாமல் ஒரு நொடியும் உறங்காமல் புரட்சி தலைவி அம்மாவிற்கு அரணாய் உறுதுணையாய் இருந்து தியாகம் செய்த சின்னம்மாவே வருக" என்று பல்லாயிரகணக்கான போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கழகத்தின் பொது செயலாளராக தலைமை ஏற்க தலைமகளே வாரீர் வாரீர் என மிகபெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!