"காலம் நமக்கு கொடுத்த கொடைதான் சின்னம்மா" - தம்பிதுரை பரபரப்பு அறிக்கை

First Published Dec 11, 2016, 12:29 PM IST
Highlights


பேரறிஞர் அண்ணா,ப புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சாதி மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வலி நடத்துவதற்கு ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சின்னம்மா என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக நீதி காக்கவும். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும், பெண்கள் வாழ்வின் மறுமலர்ச்சி ஏற்படவும் தன்னையே அர்ப்பணித்து எம்ஜிஆர் காட்டிய புனித பாதையில் புரட்சி தலைவி நம்மிடயே இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

அம்மா இல்லாத இந்த சூழ்நிலையில் அதிமுகவை வழிநடத்தும் தகுதியும் ஆற்றலும் அறிவும் அனுபவமும் ஒருங்கே அமைய பெற்றவர் மதிப்பிற்குரிய சின்னம்மா என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவையும் அதன் ஒன்றை கோடி தொண்டர்களையும் நடத்தி காப்பாற்ற காலம் நமக்கு அளித்திருக்கும் கொடைதான் சின்னம்மா.

கடந்த 33 ஆண்டுகளாக ஜெ.வுடன் நெருங்கி பழகி அவரோடு வாழ்ந்து அவருக்காக எல்லா தியாகங்களையும் செய்திருப்பவர் சின்னம்மா.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் சிறை சென்று கொடுமைக்கு ஆளானவர் சின்னம்மா ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்திலிருந்தும் அவரை காப்பற்றியவர் சின்னம்மா.

இப்படி பல சோதனைகளில் பொது ஜெயலலிதாவுடன் தோளோடு தொல் நின்று எதிர்கொண்ட சின்னம்மா அவர்கள் கழகத்தை வழிநடத்தி செல்லவேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை போன்ற கழக தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சின்னம்மா அவர்கள் கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டு அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் காக்க வேடனும் என்று டாக்டர் தம்பிதுரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!