நாளை முதல் தபால் வாக்கு.. அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை..

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 2:52 PM IST
Highlights

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ், நாளை முதல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கும் எனவும், இன்று தொடங்கியிருக்க வேண்டியது நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி ஆலோசனை வழங்கம்பட்டு முகவர்களுக்கு  பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. 

 இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பாலகங்கா, பாஜக சார்பில் பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ், நாளை முதல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கும் எனவும், இன்று தொடங்கியிருக்க வேண்டியது நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி ஆலோசனை வழங்கம்பட்டு முகவர்களுக்கு  பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை தபால் வாக்கு முறை குறித்து கட்சியினர் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை, ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை அனைவரும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் 16 தொகுதிகளுக்கு 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு குழு  15 நபர்களிடம் தபால் வாக்குகளை பெறுவர்.தபால் வாக்குகளை பெற வரும் போது  முன் கூட்டிய தெரிவிக்கப்படும். இருமுறை வாய்ப்பு வழங்கப்படும், இருமுறையும்  வாக்களிக்க தவறியவர்கள் வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என்றார். 

இருமுறை வரும் போது தபால் வாக்களிக்க முடியவில்லை எனில் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்களாலம் என நேற்று கூறியிருந்த நிலையில் இன்று அதனை திருத்தி  கூறியுள்ளார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய கராத்தே தியகராஜன்: திமுக தொடுத்த வழக்கால் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் திமுக தோல்வி பயத்தில் வழக்கு போட்டதாகவும் தெரிவித்தார்.பாஜக அனைத்து நிபதனைகளையும் ஒப்புக்கொண்டதாக கூறிய அவர், இந்த தபால் வாக்கில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை என்றார்.
 

click me!