தேர்தலில் தோற்றால் பாஜகவில் பதவி தேடி வருகிறது.. அதிமுக முன்னாள் அமைச்சர் கிண்டல்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2021, 11:22 AM IST
Highlights

தேர்தலில் தோற்றால் பாஜகவில் பதவி கிடைக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் முருகன் தாராபுரத்தில் தோல்வியடைந்தார். அவர் மத்திய அமைச்சராகிவிட்டார். 

பிரதமர் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் சிலரை அமைச்சரவையில் இருந்து விடுவித்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா கூறியுள்ளார்.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளரான குப்புராமு சமீபத்தில் தேசிய கயிறு வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் குப்புராமுவிற்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக எச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து, விழாவில் பேசிய அன்வர் ராஜா;-  பிரதமர் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் சிலரை அமைச்சரவையில் இருந்து விடுவித்துள்ளார். மேலும், தேர்தலில் தோற்றால் பாஜகவில் பதவி கிடைக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் முருகன் தாராபுரத்தில் தோல்வியடைந்தார். அவர் மத்திய அமைச்சராகிவிட்டார். இங்கு குப்புராமு மத்திய இணை அமைச்சருக்கு இணையான பதவியான தேசிய கயிறு வாரிய தலைவராகிவிட்டார். 

இப்பதவியில் அவர் தன்னிச்சையாக  முடிவெடுக்கலாம் என்றார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட குப்புராமு திமுகவின் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!