பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி... உளவுத்துறை எச்சரிக்கை... செங்கோட்டைக்குள் நுழையத் தடை..!

Published : Jul 21, 2021, 11:07 AM IST
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி... உளவுத்துறை எச்சரிக்கை... செங்கோட்டைக்குள் நுழையத் தடை..!

சுருக்கம்

அரசியலமைப்பின் 370 வது பிரிவை மாற்றியமைப்பதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த ஆகஸ்ட் 5 ம் தேதி பயங்கரவாத குழுக்கள் டெல்லியில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என பாதுகாப்புத்துறை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக டெல்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்கிற உளவுத்துறை எச்சரிக்கையால் இன்று முதல் செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்படி, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் டெல்லியில் ட்ரோன்களைப் பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதலை நடத்தி சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

அரசியலமைப்பின் 370 வது பிரிவை மாற்றியமைப்பதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த ஆகஸ்ட் 5 ம் தேதி பயங்கரவாத குழுக்கள் டெல்லியில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என பாதுகாப்புத்துறை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆகையால், ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை முடுக்கிவிட்டு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன் அச்சுறுத்தலை சமாளிக்க டெல்லி காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ட்ரோன்களை கட்டுப்படுத்தும் இரண்டு நிலையங்கள் டெல்லியில் உருவாக்கப்பட்டன. தற்போது அது நான்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடியும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை, டெல்லி செங்கோட்டைக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு இந்திய தொல்லியல் துறை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?