இப்படியே போச்சுனா அதிமுக அவ்வளவு தான்.. ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு அறிவுரை சொல்லும் ஜெயலலிதா உதவியாளர்

By Ajmal Khan  |  First Published May 5, 2023, 8:21 AM IST

ஓபிஎஸ்- இபிஎஸ் தங்களுக்குள் தொடர்ந்து மோதிக்கொண்டால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விகுறிதான் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
 


அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை போட்டி காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாருக்கு அதிமுக சொந்தம் என இரண்டு பேரும் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்ட முடிவையடுத்து நடைபெற்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இரண்டு பேரின் மோதல் காரணமாக ஆளும்கட்சியான திமுகவை எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள்து.தங்களுக்குள் விமர்சித்தும் மோதிக்கொண்டு வருவதால்  திமுகவை கடுமையாக எதிர்த்து பாஜக தன்னை எதிர்கட்சியாக பொதுமக்களிடம் காட்டி வருகிறது.  தமிழகத்தில் தற்போது யார் எதிர்கட்சி என்ற கேள்வியும்  பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இபிஎஸ்யை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை ரத்து செய்யுங்கள்.! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ்


 
ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்

இந்தநிலையில் இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அதிமுக-வின் எதிர்காலம் எப்படி? என்ற கேள்விக்கு இபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களும், ஓபிஎஸ் அவர்களை ஈபிஎஸ் அவர்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்?

<p> 

இது மாறும் போது எதிர்காலமும் மாறும்

எதிர்க்கட்சியை முழுமையாக எதிர்க்கத் தொடங்கினால்தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருக்கும் வரை ஊரில் எதிர்க்கத் தயங்குவார்கள். அதுவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றால் பயந்தவன் கூட எதிர்க்கத் தொடங்கிவிடுவான் என்பது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை..! பிரிந்து கிடப்பதால் எதிர்க்க வேண்டியவர்களை எதிர்க்க முடியாமல் நமக்கு வேண்டியவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது மாறும் போது எதிர்காலமும் மாறும் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

யார் அதிகமாக பொய் சொல்வது என்பதில் அண்ணாமலைக்கும், ஆர்.என் ரவிக்கும் இடையே போட்டா போட்டி.!-காங்கிரஸ் கிண்டல்
 

click me!