கோவை சரக டிஐஜியாக பணிபுரிந்து வந்த விஜயகுமார் நேற்று கோவை ரேஸ் கோர்ஸ் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது திடீர் தற்கொலை தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக பணிபுரிந்து வந்த விஜயகுமார் நேற்று கோவை ரேஸ் கோர்ஸ் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது திடீர் தற்கொலை தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிஐஜி விஜயகுமாரின் மறைவிற்கு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- டிஐஜி விஜயகுமார் தற்கொலை: நியாயம் கிடைக்கணும்.? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- இது பேசும் படம் அல்ல, மனதை பிசையும் படம். பல கோடிகளில் இருந்து ஒருவராய் தேர்ந்தெடுக்கப்பட்டு, காவல்துறைக்கு தன்னை அர்ப்பணித்து, நாட்டுக்காக இன்னும் நிறைய செயல்களை செய்ய வேண்டியவர் இன்று தன்னை இழந்திருப்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. முகநூலில் இவருடைய மறைவிற்காக பலர் வருந்துவதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழாமல் எப்படி இருக்க முடியும்..!
நேர்மையானவர், எளிமையானவர், காவல்துறைக்கு பேரிழப்பு என்று குறிப்பிடப்படும் இவருடைய வாழ்க்கை முடிவு இன்னொரு காவல் துறையினருக்கு வரக்கூடாது என்பதே எனது விருப்பம். அதற்காக நான் இறைவனிடம் மன்றாடுகின்றேன். விடுமுறை கிடைக்காமல், குடும்பத்தினரோடு நேரத்தை கழிக்காமல், மன அழுத்தத்தோடு நாட்டு நலனுக்காக போராடும் காவல் துறையினரை வணங்குகிறேன்.
இதையும் படிங்க;- காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர்! இளைஞர்களின் நாயகன்! அன்புமணி வேதனையுடன் புகழாரம்.!
எனக்கு இவரோடு பழக்கம் இல்லை என்றாலும் மற்றவர்களின் பதிவை பார்த்து நானும் பதிவு போடும் அளவிற்கு உந்தப்பட்டிருக்கின்றேன் என்றால், இவர் சிறப்பான அதிகாரி, இவருடைய மறைவு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது என்பதே இவர் வாழ்ந்ததின் அர்த்தம்..! என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.