பூண்டி கலைவாணனுக்குப் போட்டியாக தி.மு.க.வில் 7 பேர்! நேர்காணலில் புதிய திருப்பம்...!!

Published : Jan 04, 2019, 04:58 PM ISTUpdated : Jan 04, 2019, 05:38 PM IST
பூண்டி கலைவாணனுக்குப் போட்டியாக தி.மு.க.வில் 7 பேர்! நேர்காணலில் புதிய திருப்பம்...!!

சுருக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற நேர்காணலில் கட்சியின் துணை பொது செயலாளர் ஐ. பெரியசாமி,சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர்  டி.ஆர்.பாலு,  உள்ளிட்டோர்   கலந்து கொண்டு உள்ளனர்.

தி.மு.க.வின் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக பூண்டி கலைவாணன் நிறுத்தப்படுவார் என்று யூகிக்கப்பட்ட நிலையில் திடீரென மேலும் 7 பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர்.திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்  அறிவிப்பதற்கான நேர்காணல் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில்  தொடங்கியது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற நேர்காணலில் கட்சியின் துணை பொது செயலாளர் ஐ. பெரியசாமி,சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர்  டி.ஆர்.பாலு,  உள்ளிட்டோர்   கலந்து கொண்டு உள்ளனர்.

பூண்டி கலைவாணர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் கருணாநிதி, வீ.ஆர். பன்னீர்செல்வம்,அமுதா சந்திரசேகர்,அண்ணாதுரை  உள்ளிட்ட எட்டு பேரிடம் நேர்காணல்  நடைபெற்று வருகிறது. 

இந்த நேர்காணல் முடிந்த பிறகு பேராசிரியர் அன்பழகன்  ஒப்புதல் உடன் கட்சியின் வேடப்பாளராக பூண்டி கலைவாணனே  அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்கிறது கழக வட்டாரம்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!