இல்லாத இளமைக்கு என்ன செய்யப்போறார் கமல்?

Published : Jan 04, 2019, 03:22 PM IST
இல்லாத இளமைக்கு என்ன செய்யப்போறார் கமல்?

சுருக்கம்

இந்தியன் - 2வில் நடிக்க இருக்கும் கமல்ஹாசன் இளமை, முதுமை என இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். இதில் முதுமையான தோற்றத்தை கொண்டு வர ஹாலிவுட் கலைஞர்கள் வர உள்ளனர்.

* ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஆதாரம் இல்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அன்று, அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கேட்டிருந்தேன். ஆனால் தரப்படவில்லை.: தீபாவின் கணவர் மாதவன் புகார். (மாதும்மா மறுபடியும் மறுபடியும் சொல்றோம், அந்த வீடியோவுல பாட்டு, பைட்டு, காமெடி சீன்ஸ்லாம் வராது. நீங்க நினைக்கிற மாதிரி அதை ஃபேஸ்புக்ல ஏத்தி லைக்ஸ்லாம் வாங்க முடியாது! புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்)

* வரும் ஏழாம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், எட்டாம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விசாரணைக்கு கமிஷன் அழைத்துள்ளது. ஆனால் அன்று என்னால் ஆஜராக முடியாததால், அவர்களை 10ம் தேதி விசாரணைக்கு அழைக்கும்படி கேட்டுள்ளேன்: சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன். (ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு ஆகாது பாஸு!)

* இந்தியன் - 2வில் நடிக்க இருக்கும் கமல்ஹாசன் இளமை, முதுமை என இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். இதில் முதுமையான தோற்றத்தை கொண்டு வர ஹாலிவுட் கலைஞர்கள் வர உள்ளனர்: செய்தி. (இருக்குற முதுமையை இன்னும் அதிகமாக மேக் அப் போடுவீங்க, சரி! இல்லாத இளமையை எப்படிடா கொண்டு வருவீங்க? அடேய் பதில் சொல்லிட்டுப் போங்கடா...)

* பெண்கள் வந்ததால் நடையை அடைத்து பூஜை நடத்தியது விசித்திரமானது. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தை அவமதித்த தந்திரி, பதவி விலகுவதே நல்லது: கேரள முதல்வர் பினராயி விஜயன். (அது சரிதான். ஆனா முல்லைப் பெரியார் விஷயத்துல நீதிமன்றம் சொன்னதை கேட்காம அவமதிக்கிற நீங்க எப்ப  சேட்ட பதவி விலகுறீங்க? இத நாங்க கேட்கலை, பக்தாள்ஸ் கேட்கிறா, பதில் சொல்லுங்கோ.)

* பாலா இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமா உலகைப் பற்றிய புரிதல் முன்பை விட இப்போது எனக்கு அதிகமாகி இருக்கிறது. அதனால்தான் ஏற்கனவே பணியாற்றிய இயக்குநருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்: தன்ஷிகா (சர்தான்! மதுரைக்காரய்ங்க நம்ம தலையில ஓங்கி குட்டினா ஒத்த தலைவலி ஓடிப்போயிடும், முதுகுல குத்துனா வாயு பிடிப்பு விலகிடுமுன்னு  இந்தப் புள்ளைக்கு யாரோ வர்ம வைத்தியம் மத்தி சொல்லிக் கொடுத்திருக்காய்ங்க. அதான் பாலாட்ட நடிக்க விருப்பப்படுது.)

PREV
click me!

Recommended Stories

ஈரானுடன் மோதக்கூடாது... அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..!
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி..? இடியை இறக்கும் மத்திய உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட்..!