ஜானகியின் நினைவு தினம் அனுசரிப்பு - சமாதியில் மலர் வளையம் வைத்து பொன்னையன் அஞ்சலி

Asianet News Tamil  
Published : May 19, 2017, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ஜானகியின் நினைவு தினம் அனுசரிப்பு - சமாதியில் மலர் வளையம் வைத்து பொன்னையன் அஞ்சலி

சுருக்கம்

ponnayan pays homage janaki death anniversary

எம்.ஜி.ஆர் மனைவி ஜானகியின் 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமாவரத்தில் உள்ள அவரது சமாதியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த பொன்னையன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எம்.ஜி.ஆருக்கு மூன்றாவது மனைவி ஜானகி. முதலில் திரையுலகில் நடித்து வந்த ஜானகி எம்.ஜி.ஆர் மீது காதல் வசப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராதா கோபாலகிருஷ்ணன், ரவீந்திரன் என்ற அப்பு, லதா ராஜேந்திரன், கீதா மதுமோகன், சுதா விஜயன், ஜானகி சிவராமன் ஆகிய 6 பேரை வளர்ப்பு பிள்ளைகளாக தத்தெடுத்து கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு ஜானகி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இவர்தான் தமிழகத்தில்  முதல் பெண் முதலமைச்சர் ஆவார். சில மாதங்களே முதலமைச்சர் பதவியில் ஜானகி நீடித்தார். அதன்பின்பு அதிமுக ஜா அணி ஜெ அணி என இரண்டாக பிரிந்தது.

தொடர்ந்து ஜானகி அரசியலில் இருந்து விலகி எம்.ஜி.ஆரின் ராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி, கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

இந்நிலையில், ராமாவரம் தோட்டத்தில் உள்ள ஜானகியின் சமாதியில் அவரது 21 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த பொன்னையன் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஜானகியின் வளர்ப்பு மகளான சுதா விஜயன் உடனிருந்தார்.

அப்போது சுதா விஜயனை சந்தித்து ஜானகி நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடுவோம் எனவும், தங்கள் அணிக்கு நீங்கள் வந்தால் முக்கிய பதவி அளிக்கப்படும் எனவும் பொன்னையன் வாக்குறுதி அளித்தார்.

PREV
click me!

Recommended Stories

'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!