
அதிமுகவை பொறுத்தவரை யார் குடும்பத்திடமும் போக கூடாது. இது அடிமட்ட தொண்டனுடைய கட்சி. இதில், எந்த எதிர் பார்ப்பும் இருக்க கூடாது.
அதிமுகவில் உள்ள இரு அணிகளும் ஒன்று சேரக் கூடாது என சிலர் நினைக்கிறார்கள். அதை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் தனி அணியாக இருப்பதால், மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு இல்லை என யாரும் கூற முடியாது.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறியபோது, அவருடன் அப்போதை சட்டமன்ற உறுப்பினர் வேலப்பன் மட்டும் இருந்தார். மற்ற அனைத்து எம்எல்ஏக்களும் கருணாநிதியுடன் இருந்தார்கள். அதை அப்படியே முறியடித்து, மக்களின் ஆதரவால் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார்.
மக்கள்தான் நிர்வாகிகள், அவர்களின் முடிவு ஆட்சி அமைக்கும். ஆட்சி அதிகாரம் இருப்பதால், யாரும் முன்னிலை படுத்தி கொள்ள முடியாது.