பல கோடிகளை சுருட்டிவிட்டார் திண்டுக்கல் சீனிவாசன் - பரபரப்பு பேட்டியில் ஓ.பி.எஸ்.

Asianet News Tamil  
Published : May 19, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பல கோடிகளை சுருட்டிவிட்டார் திண்டுக்கல் சீனிவாசன் - பரபரப்பு பேட்டியில் ஓ.பி.எஸ்.

சுருக்கம்

Dindigul Srinivasan has taken away many crores

அதிமுகவில் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், பல கோடிகளை சுருட்டிவிட்டார் என ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவில் உள்ள பல விஷயங்களை பிடிக்காமல் ஒதுங்கினேன். இதையடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து பலரும் வந்தனர்.

ஆனால் சசிகலா, கட்சியின் பொருளாளராக இருந்த என்னை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.

உடனே நான், கட்சியின் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதினேன். திண்டுக்கல் சீனிவாசன் முறைப்படி தேர்வு செய்யப்படாதவர். அவரே கட்சியின் பொருளாளர் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும்வரை வங்கி கணக்கை முடக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தேன்.

என்னுடைய கடிதத்தை வங்கி பொருட்படுத்தவில்லை. இதனால், திண்டுக்கல் சீனிவாசன் பல கோடிகளை சுருட்டிவிட்டார்.

இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். விசாரணையின் முடிவு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?