
என்னை சிறந்த நிர்வாகி என ரஜினி கூறியதற்கு, மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், தெரிவித்ததாவது.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளிலேயே அரசியல் குறித்து பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். முன்னதாக அவர், பேசும்போது என்னை ஒரு கட்சியின் சிறந்த நிர்வாகி என கூறியுள்ளார். இந்த பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசியல் நோக்கத்துக்காக வருமான வரித்துறையை, ஆளுங்கட்சியினர் பயன்படுத்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை சோதனை நடந்தால் அதை வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.