
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரா அகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அதை தொடர்ந்து ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் பணம் பட்டுவாடா நடந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், ரூ.89 கோடி சிக்கியது. பண பரிமாற்றம் குறித்து பல்வேறு ஆவணங்கள் சிக்கியது.
இதற்கு தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்க, லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்கு உரிய தண்டனையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.