Pongal Gift: அடிதூள்.. ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு பணம்? வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Dec 21, 2021, 6:32 AM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூபாய் 2500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது மழை வெள்ளம், கொரோனா ஆகிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசு தொகையை வழங்க தமிழகஅரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூபாய் 505 செலவில் வழங்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூபாய் 2500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது மழை வெள்ளம், கொரோனா ஆகிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால், சிறப்புத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது  தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

click me!