பொங்கல் பரிசு பொருட்கள் இங்கு இருந்து இறக்குமதி... எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!!

Published : Jan 11, 2022, 07:56 PM IST
பொங்கல் பரிசு பொருட்கள் இங்கு இருந்து இறக்குமதி... எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!!

சுருக்கம்

கமிஷனுக்காக வடமாநிலத்தில் இருந்து தரமற்ற முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கமிஷனுக்காக வடமாநிலத்தில் இருந்து தரமற்ற முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கொண்டுள்ளனர். 21 பொருட்கள் தருவதாக அறிவித்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை, பொங்கல் பரிசு தொகுப்பு எடுத்துச் செல்வதற்கு கட்டை பை வீட்டிலிருந்து வரும்போது எடுத்து வரும்படி அறிவித்துள்ளனர். பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமே கைப்பை வழங்கப்படும் பொருட்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றதும் வழங்குவதும் பயனற்றது. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றவையாக வழங்கப்படுவதாக பொதுமக்களின் வீடியோவை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது.  தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம். ஏற்கனவே நான் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக கமிஷன் கிடைப்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்,பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளை அடிப்பது தான் மிச்சம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகும் இது போன்று பொங்கல் பரிசு தொகுப்பு தரமான பொருட்களையே வழங்குகிறார்கள். மேலும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி, சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படவில்லை. ராஜேந்திர பாலாஜி மீதான பொய் வழக்கு திட்டமிட்டு போடப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தேவையின்றி பயன்படுத்தி வருகிறது. 

திமுக அரசை பொறுத்தவரை விளம்பரம் மட்டுமே, காவல்துறையினர் முதலமைச்சர் டீ குடிப்பதற்கும், சைக்கிள் ஓட்டும் போதும் தனது பாதுகாப்புக்காக 500 காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கொரோனா பரவலை சரியான வழியில் தடுக்க தவறிவிட்டது. ஏற்கனவே கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதை பயன்படுத்தி தான் தற்போது கட்டுப்படுத்தினார்கள் தனியாக எதுவும் வாங்கவில்லை. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வேண்டியது தற்போது தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் கல்லூரியும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை தான். அதிமுக அரசின் ஆலோசனைகள் பெற்று இருந்தால் கொரோனா பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது. தமிழக அரசு எல்லாவற்றிற்கும் குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் செயல்பாடுகள் இல்லைதிறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது. நாட்டிற்கு வழிகாட்டியாக செயல்படும் அரசாங்கம் என்று கூறுகிறார் ஸ்டாலின் ஆனால் பொங்கல் பரிசுத் தொகை கூட தரமற்றதாக கொடுப்பது இவைதான் வழிகாட்டியா? என்று கேள்வி எழுப்பினார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!