மருந்து இருக்கும்.. ஆக்சிஜன் இருக்கும்.. டாக்டர் இருக்க மாட்டாங்க.. இத்தான் சார் ஒமைக்ரான்.. Dr. பகீர்

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2022, 6:44 PM IST
Highlights

அதேபோல் இரண்டாவது அலை 1 முதல் 2 மாதங்கள் வரை உச்சத்தில் இருந்தது. பிறகு ஒரே மாதத்தில் வீழ்ச்சியை சந்தித்தது. மொத்தத்தில் 3 முதல் 4 மாதங்கள் வரை 2வது அலையின்  தாக்கம் இருந்தது. ஆனால் மூன்றாவது அலையை பொருத்தவரையில் உச்சம் என்பது பத்து நாள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும், அது உச்சத்தில் இருக்கும்போது நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தற்போது பரவி வரும் மூன்றாவது அலை வைரஸில் அதிக அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பிரபல விபத்து ,அவசர சிகிச்சை மருத்துவர் கவலை தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் மருந்து இருக்கும், ஆக்ஸிஜன் இருக்கும், ஆனால் சிகிச்சை வழங்க மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என்றும்  அவர் கூறியுள்ளார். எனவே ஒமைக்ரான் குறித்து மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது, அனைவரும் தவறாது முகக் கவசம் சமூக இடைவெளியை உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் முதல், இரண்டு அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் கடந்த இரண்டாவது அலையின் போது பாதிப்பு அதிகமாக இருக்க காரணமாக இருந்தது. அதேபோல தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் மூன்றாவது அலைக்கு வழி வகுத்திருக்கிறது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த 200 நாட்களில் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை உள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்ந வைரஸ் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் வேகமெடுக்க ஆரம்பிக்கும் என்றும் பிப்ரவரி மாதம் நடுப்பகுதியில் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்றும் பின்னர் மார்ச்ச மாத இறுதிக்குள் குறைய வாப்பு இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இந்த வைரஸ் டெல்டாவை காட்டிலும் பன்மடங்கு வேகமாக பரவக் கூடியது என்பதால் மக்கள் அலட்சியம் காட்ட கூடாது என்றும் இந்ந வைரஸ் உச்சத்தை அடையும் போது நாளொன்றுக்கு 20 லட்சம் பேர் பாதிக்கபடக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் அரசு மருத்துமனையில் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான மருத்துவ பணியாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மற்ற வைரஸ்களை காட்டிலும் ஒமைக்ரான் துகள்கள் சிறிய அளவிலானது என்பதால் இது எளிதில், வேகமாகப்பரவக்கூடியது என்றும், எத்தனை முகக் கவசங்கள் அணிந்தாலும் அது எளிதில் பரவும் என்றும் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தனியார்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள பிரபல மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர் மோகன்,  ஒமைக்ரான் வைரஸ் மின்சாரத்தை விட வேகமாகப் பரவுக்கூடியது, ஒரு நிமிடத்தில் 10 பேருக்கு அது பரவுகிறது என எச்சரித்துள்ளார். தொடர்ந்து அவர் பேசியிருப்பதாவது, முதல் அலை இரண்டாவது அலையைப் போல இது இருக்காது, முதல் அலை உச்சத்தை அடைவதற்கு நீண்ட நாட்கள் ஆனது, அதேபோல் அது வீழ்ச்சியை சந்திப்பதற்கும் சில மாதங்கள் ஆனது. 

 

அதேபோல் இரண்டாவது அலை 1 முதல் 2 மாதங்கள் வரை உச்சத்தில் இருந்தது. பிறகு ஒரே மாதத்தில் வீழ்ச்சியை சந்தித்தது. மொத்தத்தில் 3 முதல் 4 மாதங்கள் வரை 2வது அலையின்  தாக்கம் இருந்தது. ஆனால் மூன்றாவது அலையை பொருத்தவரையில் உச்சம் என்பது பத்து நாள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும், அது உச்சத்தில் இருக்கும்போது நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இதுதான் கடைசி அலை என்று கூறமுடியாது, முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது, பிறகு அது டெல்டா வைரசாக மாறியது, இப்போது ஒமைக்ரானாக உருவெடுத்துள்ளது. பின்னர் இந்த இரண்டும் சேர்ந்து  டெல் மைக்ரான் ஆக சில இடங்களில் பரவுகிறது. இந்த வைரஸ் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மாதிரியாக உருமாறுகிறது. இந்த வைரஸ் என்பது பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சியின் படி ஒரு அறையில் தோற்று பாதித்த வருடன் வெறும் ஆறு நிமிடங்கள் இருந்தால் போதும், அந்த அறையில் உள்ள அனைவருக்கும் இந்த தொற்று பரவி விடுகிறது. ஏனென்றால் ஒமைக்ரான் மற்ற வைரஸ்களை காட்டிலும் அளவில் மிகச் சிறியது. எனவே அது எளிதில் பரவக்கூடியதாக உள்ளது.

இதனால் இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதுதான் இருப்பதிலேயே ஆபத்தான நிலை, குறிப்பாக முதல் அலை மற்றும் இரண்டாவது அலையை காட்டிலும் மூன்றாவது அலை மிகப் பெரும் சவாலாக இருக்கும், ஏனென்றால் மருத்துவ துறையை சார்ந்தவர்களே அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் அதற்கு காரணம். மருத்துவர்கள், செவிலியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் மேன் பவர் குறையும் நிலை உள்ளது. அதிக அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நோய் பாதிப்புக்கு ஆளாவதை காணமுடிகிறது. இதுதான் மிகப்பெரிய சவால், மருந்து இருக்கும்.. ஆக்சிஜன் இருக்கும்.. ஆனால் மருத்துவம் பார்க்க மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்க மாட்டார்கள் என்ற நிலை உருவாகும் என்று கவலை உள்ளது.  பிபிஇ கிட், மாஸ்க் அணிந்துகொண்டாலும் அதையும் தாண்டி வைரஸ் தொற்று தாக்குகிறது. ஏனென்றால் இந்த வைரஸின் பரவல் அந்த அளவிற்கு வீரியமாக உள்ளது தான் அதற்கு காரணம், இதில் ஒரே  ஆறுதலான விஷயம் என்னவென்றால் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பதுதான். எனவே அதன் தாக்குதலில் இருந்து ஓரளவுக்கு தப்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். 
 

click me!