M.K. Stalin: ஜனவரி 26... முதல்வர் ஸ்டாலினின் பிளான்.. தமிழக எம்பிக்களை சந்திக்க ஓகே சொன்ன அமித் ஷா...!

By manimegalai aFirst Published Jan 11, 2022, 7:40 PM IST
Highlights

தமிழக எம்பிக்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்பாயிண்ட்மெண்ட் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

சென்னை: தமிழக எம்பிக்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்பாயிண்ட்மெண்ட் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்துவிட்டதே, நீட் தேர்வு விவகாரம் என்ன ஆனது என்று  கேள்விகள் எழுப்பட்டு வந்தன.

செப்டம்பர் 13ம் தேதி சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாட்கள், மாதங்கள் கடந்தும் இன்னமும் மசோதா, ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

ஆகையால் இது குறித்து, ஜனாபதியையும், மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட தமிழக அரசியல் கட்சியினர் முடிவெடுத்தனர். திமுகவுடன், எதிர்க்கட்சியான அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் முயற்சி மேற்கொண்டன.

கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் எதிரொலியாக, ஜனாதிபதியை சந்திக்க முடியவில்லை. ஆகையால் கோரிக்கை மனுக்கள் ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 30ம் தேதி டெல்லியில் பிரஸ் மீட் கொடுத்த டிஆர் பாலு, அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை என்று கூறி, மீண்டும் அவரை சந்திக்க தேதி கோரி மெயில் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் தலைநகர் டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு எம்பிக்கள் திரும்பினர். திமுக எம்பிக்கள் ஒன்றாக சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சில விஷயங்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிவாலய வட்டாரங்களில் இருந்து கூறப்படும் தகவல்கள் பின்வருமாறு: எந்த கட்சி எம்பியாக இருந்தாலும், அவர் அந்த கட்சியின் ஒரேயொரு எம்பியாக இருந்தாலும் மத்திய அமைச்சரிடம் அப்பாயிண்ட்மெண்ட பெற்று சந்திக்க முடியும்.

ஆனால் ஒட்டுமொத்த தமிழக எம்பிக்கள், எந்த கட்சி பாகுபாடும் இன்றி டெல்லி சென்றோம். ஆனால் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை, இது தமிழக எம்பிக்களுக்கும், திமுகவுக்கும் தலைகுனிவு தான்.

நாட்டின் மிக முக்கியமான மாநிலமான தமிழகத்தின் எம்பிக்களை இப்படி காக்க வைத்ததற்கு நிச்சயம் பதிலடி தரவேண்டும். ஆகையால் வரும் 26ம் தேதி குடியரசு நாளில் மெரினாவில் ஆளுநர் கொடியேற்றுவதற்கு பதில் முதல்வர் கொடியேற்ற வேணடும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனராம்.

அது சரியாகுமா? என்ற கேள்வி எழுந்த போது ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மேற்கோள் காட்டினராம். அனைத்தையும் கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் யோசிப்பதாக கூறி உள்ளதாக அறிவாலயம் தரப்பில் சொல்லப்படுகிறது.

அவரின் யோசிப்போம் என்ற வார்த்தையின் வெளிப்பாடுதான்.. சட்டசபையில் உள்துறை அமைச்சரை கடுமையாக குற்றம்சாட்டியது என்று கூறுகின்றனர் தமிழக அரசியலை உன்னிப்பாக பார்ப்பவர்கள். முதல்வர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி கொடியேற்றலாம் என்று யோசனையுடன் இருப்பதாகவும் தகவல்கள் கசிய ஆரம்பித்து இருக்கின்றனவாம்.

இந்த அனைத்து விவரங்களும் வழக்கம் போல டெல்லிக்கு நோட் போட்டு அனுப்பி வைக்கப்பட்டதாம். நீட் தேர்வில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு என்பது நாடே அறிந்த ஒன்று. பாஜகவுக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது, திமுகவுக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது, ஆகையால் தமிழக அனைத்து கட்சி எம்பிக்களை புறக்கணிப்பது பாஜக எதிர்ப்பு என்ற தமிழக அரசியலின் நிலைப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டதாம்.

இதன் பின்னர் தான், உள்துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி தரப்பில் இருந்து தமிழக அனைத்து கட்சி எம்பிக்களை சந்திக்குமாறு உத்தரவு போயிருக்கிறதாம். கடைசியில் வரும் 17ம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்களை சந்திக்க அமித் ஷா ஓகே சொல்லி உள்ளாராம்.

இது தொடர்பாக திமுக எம்பி டிஆர் பாலுவிடம் இருந்து எம்பிக்களுக்கு மெசேஜ் கொடுக்கப்பட்டு உள்ளதாம். வரும் 17ம் தேதி மாலை 4 மணி முதல் 4.30க்குள் இந்த சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் அனைத்து கட்சிகளை சேர்ந்த 7 எம்பிக்கள் கொண்ட குழு அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. அடுத்து வரக்கூடிய நாட்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!