ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை நாங்கள் மட்டுமே உத்தமர்கள் என்று சொல்லும் திமுகவுக்கு இது அசிங்கமா இல்லையா.. டிடிவி

By vinoth kumarFirst Published Oct 1, 2022, 11:41 AM IST
Highlights

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?  டிடிவி. தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் எதிர்க்கட்சிகளாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, தரமற்ற பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- அமைச்சர்களின் ஆணவப் பேச்சால்.. திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்கிறாங்க.. டிடிவி.தினகரன்.!

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ''நாங்கள் மட்டுமே உத்தமர்கள்'' என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  மிஸ்டர் எடப்பாடி... "இனி நாங்க ஜீரோ இல்ல ஹீரோ"... இபிஎஸ்சை எகிறி அடித்த வைத்திலிங்கம்.

click me!