கோவை மாநகர் பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஜாமினில் விடுதலை.. BJP தொண்டர்கள் குத்தாட்டம் .

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2022, 10:02 AM IST
Highlights

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசாவை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாநகர பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசாவை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாநகர பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறை சென்ற பாஜக தலைவர் விடுதலை ஆகி இருப்பது கோவை பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல.. ஆதாரத்துடன் ஸ்டாலின் அரசை இறங்கி அடிக்கும் அண்ணாமலை..!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இந்து மதம் பிராமணர் அல்லாதவர்களை எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறது என்பது குறித்த விளக்கிப் பேசினார். நீ இந்து என்றால், சூத்திரன் தான்,  சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளை என்று பொருள், அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறீர்கள் என ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.  இது  பாஜகவினரை கொதிப்படையச் செய்தது.

இதையும் படியுங்கள்: உண்மை தன்மையை அறிந்து சமூக வலைதளத்தில் செய்தியை பகிருங்கள்… Twitter Spaces-ல் ஸ்டாலின் உரை!!

ஆ. ராசாவுக்கு எதிராக பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இதை கண்டித்து பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் ஆலயத்தில் புகார் கொடுக்கப்பட்டது, ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தது, பின்னர் ஆ. ராசாவை கண்டித்து கோவையில் உத்தம ராமசாமி தலைமையில் போராட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், ஆ ராசா கோவைக்கு வந்தால் செருப்பால அடிப்பேன் என பேசினார்.

அதுமட்டுமின்றி அவரை மிரட்டும் தொனியில் அவர்  பேச்சு இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அவர் மீது புகார் அளித்தனர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உத்தம ராமசாமியை கைது செய்தனர். உத்தம ராமசாமியின் கைது பாஜக தொண்டர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்தது.  பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் தமிழக போலீசாரை கண்டித்தனர். உத்தம ராமசாமி கைது நடவடிக்கையை கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கைதான போதும் கூட, தனது பேச்சில் இருந்து பின்வாங்க போவதில்லை என உத்தம ராமசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், அதற்கான விசாரணை வந்த நிலையில் உத்தம ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை அவர் கோவை மத்திய சிறையில் இருந்து வெளியில் வந்தார். அங்கு திரண்டிருந்த பாஜகவினர் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.  
 

click me!