அமைச்சர் மெய்யநாதனுக்கு என்ன ஆச்சு.. மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை விரைகிறார்..!

Published : Oct 01, 2022, 09:47 AM IST
அமைச்சர் மெய்யநாதனுக்கு என்ன ஆச்சு.. மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை விரைகிறார்..!

சுருக்கம்

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன். இவர் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். குளிரூட்டப்பட்ட முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவில் சுமார் 2 மணியளவில் சிதம்பரம் அருகே வந்த போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதுதொடர்பாக அமைச்சரின் உதவியாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து, உடனே சிதம்பரம்  ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ரயிலில் இருந்த அமைச்சர் மெய்யநாதனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் மெய்யநாதன் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து,  தகவல் அறிந்த அமைச்சரின் குடும்பத்தினர் சிதம்பரம் விரைந்தனர். 

இந்நிலையில்,  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு  அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உடல் பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!