உங்களுக்காக மீண்டு வருவேன்... உருக்கமாக பேசிய ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த விஜயகாந்த்..!

By vinoth kumarFirst Published Jan 12, 2020, 3:15 PM IST
Highlights

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். 

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

பிறகு மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிலர் குரல் எழுப்புகின்றனர் என்று கூறியவர், இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தாலும், இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாகக் கூறினார். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாத., தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு அனைத்து மதமும் ஒன்று தான் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, விழாவில் பேசிய விஜயகாந்த், தமக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் தமது முதல் கடவுள் என்று தெரிவித்தார். மேலும் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன் என்று கூறியதோடு, தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

click me!