என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த தாய் பிரிந்து சென்றுவிட்டார்.. உடைந்து கதறிய ஆளுநர் தமிழிசை.

Published : Aug 18, 2021, 09:31 AM ISTUpdated : Aug 18, 2021, 09:34 AM IST
என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த தாய் பிரிந்து சென்றுவிட்டார்.. உடைந்து கதறிய ஆளுநர் தமிழிசை.

சுருக்கம்

இந்த தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக செய்தியை தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநரும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று அதிகாலையில் 4 மணி அளவில் காலமானார். இது குறித்த தகவலை தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக  முன்னாள் தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில  ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயாரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உயிரிழந்தார். 

இந்த தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக செய்தியை தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை பார்த்து பார்த்து ஊட்டி ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாளும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுத்தவர் எனது தாயார் என தமிழிசை உருக்கத்துடன் கூறியுள்ளார். சாதாரண மருத்துவராக இருந்து, பாரதிய ஜனதாவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, மருத்துவர் அணி மாநில தலைவர், பின்னர் தமிழக பாஜகவின் மாநில தலைவர் என உயர்ந்து, அரசியலில் பல கடுமையான விமர்சனங்களையும் தாங்கி களமாடிய தமிழிசை  சௌந்தரராஜனின் கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி ஆளுநர் என பதவி பெற்று உச்சத்தை தொட்டுள்ளார் அவர். தனது இந்த வளர்ச்சிக்கும் தனது பெற்றோர்களே காரணம் என்றும், குறிப்பாக எனது தாயாரின் ஆக்கமும் ஊக்கமுமே காரணம் என அவர் பல பேட்டிகளில் கூறியதை கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அன்பு தாயாரை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பலரும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.தமிழிசை சௌந்தரராஜன்  தாயார் கிருஷ்ணகுமாரியின் மறைவு பாஜக- காங்கிரஸ் என இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!