திமுகவால் வெடித்த ரகளை... ஆய்வுக்குழு கூட்டத்தில் கட்டிபுரளாத குறையாக காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்...வீடியோ!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 14, 2021, 1:24 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய கடைசி நாளான இன்று ஆய்வுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதற்காக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு  15 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 21 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முறை வெறும் 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சஞ்சய் தத், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. வேட்பாளர்கள் ஆய்வுக்குழு தலைவர் திக் விஜய் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தும் தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக ஒதுக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் வெடித்தது. 

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய கடைசி நாளான இன்று ஆய்வுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எவ்வளவு பேசி பார்த்தும், நிர்வாகிகளை விலக்கி விட்டும் யாரும் சண்டையை நிறுத்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் ஆய்வுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்டிபுரளாத குறையாக சண்டையிடும் வீடியோ இதோ... 

click me!