
ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சிக்கு உட்பட்ட தென்னூரில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தலை விரித்து ஆடும் குடிநீர் பிரச்னையை மையமாக வைத்து, குளங்கள் மற்றும் குட்டைகளை, தூர்வார வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் பணிகள் இன்றைக்கு தமிழகத்திலே பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி, அது ஏற்கனவே இருந்த 5 ஆண்டு ஆட்சியாக இருந்தாலும் சரி அல்லது பினாமி ஆட்சியாக இருந்தாலும் சரி, அதற்கான பணிகளில் அவர்கள் முனைப்புடன் ஈடுபடவில்லை என குற்றம்சாட்டினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த தான். இதனையடுத்து கரூருக்கு கரூருக்கு செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து குளித்தலை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.