அவங்க சொன்னதையே நம்பளும் சொல்லிடுவோம்...! அந்தர் பல்டி அடித்த பொன்னார்...! குஷியில் தமிழிசை...!

First Published Jan 22, 2018, 3:05 PM IST
Highlights
Pon Radhakrishnan oppose to bus fare increased


போராட்டம்

ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விளக்கம்

ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார். 

பேச்சுவார்த்தை

இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது. அப்போது பேசிய அமைச்சர் போக்குவரத்து துறையில் வேலை பார்ப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என கூறி வந்தார். 

வாபஸ்

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள். 

விலை உயர்வு

இந்நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

கண்டனம்

இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக போராட்டமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் கண்டம் தெரிவித்திருந்தார். 

ஆதரவு
ஆனால் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேருந்து கட்டண உயர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். போக்குவரத்து துறை மிகவும் நலிவடைந்துள்ளதால் கட்டண உயர்வு சரியே என தெரிவித்திருந்தார். 

சர்ச்சை 

ஒரே கட்சியை சேர்ந்த இரு பெரும்புள்ளிகள் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் அவர்கள் கட்சியில் பெரும் சர்ச்சை கிளம்பியது. 

தீர்வு

இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அமைச்சர் பொன்னார் தனது கருத்தை மாற்றி கூறியுள்ளார். அதாவது பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். 
 

click me!