எஸ்.ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு...? பகீர் கிளப்பும் முன்னாள் எம்.எல்.ஏ..!

By vinoth kumarFirst Published Jan 15, 2020, 11:26 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தலைமறைவாக இருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரியில் எஸ்.ஐ வில்சன் படுகொலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்பு இருப்பதாகக் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தலைமறைவாக இருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.சாண்ட் மாஃபியாக்களுக்கு தொடர்பு இருப்பதாகக் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- “மத்திய இணை அமைச்சராக இருந்த பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.சாண்ட் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே, தான் அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படாமல் கவனமாக பார்த்துக்கொண்டார்.

இப்போது கூட கேரளாவில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்தே கொலையாளிகளை தேடுகின்றனர். தனது சுயநலத்துக்காகவும், மணல் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளாமல் மறைக்கவுமே சி.சி.டி.வி கேமராக்களை இயங்காமல் தடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே கேரளாவுக்கு சட்டவிரோதமாக தினமும் 500 லாரிகளில் போலி எம்.சாண்ட் மணல் கடத்தும் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆட்களே சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

மணல் கடத்தல் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்த எஸ்.ஐ வில்சனை குண்டர்களை வைத்து கொலை செய்துவிட்டு, பழியை வேறு யார் மீதாவது போட்டுவிடலாம் எனத் திட்டமிட்டே தி.மு.க கூட்டணி மீது குற்றம்சாட்டி வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆகவே தமிழக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆட்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகும் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!