இந்தியாவின் ஆலோசனைகளுக்காக காத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா...!! ஒரே போன்காலில் பிரச்சனைகளை தீர்க்கும் ஃபவர்புல் பிரதமர்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2020, 11:26 AM IST
Highlights

 வரும்   மே மாதம் ரஷ்யாவில் 75வது வெற்றி நாள் விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்ததை புதிர் நினைவுகூர்ந்தார்.

அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் தொலைபேசியில் சர்வதேச பிரச்சினைகள் குறித்து  உரையாடியுள்ளார் . சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே பொருளாதார நெருக்கடி ,  எல்லை பிரச்சனைகள்,  தீவிரவாத நடவடிக்கைகள் என அமைதியற்றி நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் எழுந்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும்  தொலைபேசியில் பிராந்திய சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர் .

இது குறித்து பிரதமர் அலுவலகம்  அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது ,  பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் உடன் தொலைபேசியில் உரையாடினார் , அப்போது  அதிபர் புடினுக்கும் ,  ரஷ்யர்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்  அதேபோல் இந்திய மக்கள் அமைதியும் மகிழ்ச்சியும் வளமும் பெற்று வாழ புடின் வாழ்த்தினார்.  அப்போது  இரு தலைவர்களும் பிராந்திய சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் , எல்லை பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாகவும் ஆலோசித்தனர் .  இந்த ஆண்டு இந்தியா ரஷ்யா இடையே நல்லுறவை  மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர் . வரும்   மே மாதம் ரஷ்யாவில் 75வது வெற்றி நாள் விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்ததை புதிர் நினைவுகூர்ந்தார். 

அதேபோல் இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆவலாக உள்ளதாகவும் மோடி தெரிவித்தார் . ஈரான் அமெரிக்கா இடையே பதட்டமான நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ,   ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் மோடி பேச்சு நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது . 

click me!