தைரிய லட்சுமி என்றால் அம்மா...!! தலை சுத்திருச்சி என கால்பிடிக்கும் காரியக்காரர் யார்...?? உதயநிதி உள்குத்து...

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2020, 10:49 AM IST
Highlights

அவரது பதிவில் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளார் தலை சுத்திருச்சு என ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் .  
 

தைரியலட்சுமி என்றால் அம்மா ,  தலைவர் என்றால்  எம்ஜிஆர் ,  முதலமைச்சர் என்றால் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி என திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  வித்தியாசமான முறையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருப்பது திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல அதிமுகவினரையும்  கவர்ந்துள்ளது .  அவரின் பொங்கல் வாழ்த்து துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்துக்கு பதிலடி  எனவும்  பரபரப்பாக பேசப்படுகிறது .  நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் முரசொலி பத்திரிக்கை துக்ளக் பத்திரிக்கை யுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது ரஜினிகாந்தை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது .  நடிகர் ரஜினிகாந்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா  சென்னையில் நடந்தது .  அதில் கலந்து கொண்ட  துணைகுடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் .  


அதில்  துக்ளக் பத்திரிக்கை பற்றியும் சோவின் பெருமை குறித்தும்,  நடிகர் ரஜினிகாந்த் பேசியது மட்டுமல்லாமல் அதில் திமுகவை விமர்சித்தும் திமுகவை வம்பிழுக்கும் விதமாகவும் கருத்து  கூறியுள்ளார் .  பத்திரிக்கையாளர் சோ நையாண்டி. அறிவார்ந்த கட்டுரைகள் ,  கேள்வி பதில்கள் என துக்ளக்கிற்கென்று ஒரு இனத்தையே உருவாக்கினார் முரசொலி வைத்திருந்தால் அவன் திமுககாரன் துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி ,  துக்ளக் வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா  அல்லது படித்ததால் ஆனாரா என்பது தெரியவில்லை என பேசினார் .  அவரின் இந்த பேச்சு ரஜினிக்கு பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது .  இந்நிலையில் நெட்டிசன்கள் ரஜினியை வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன் பங்குக்கு ரஜினிக்கு எதிர்ப்பு காட்டியுள்ளார் ,  அவரது பதிவில் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளார் தலை சுத்திருச்சு என ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் .

 

அதாவது செய்தியாளரிடம் பேசும்போது செய்தியாளர் ஒருவர் உங்கள் கொள்கை என்னன்னு கேட்டார் எனக்கு அப்படியே தலை சுத்திருச்சி என ரஜினி பேசியது மிகவும் பிரபலம்.  தற்போது உதயநிதி ஸ்டாலின் அதை குறிப்பிட்டு பொங்கல் வாழ்த்து சொல்வது போல ரஜினியை சுற்றி விமர்சித்து பதிவிட்டுள்ளார் .  அவரது பதிவில் முதல்வர் என்றால்  முத்தமிழ் அறிஞர் , தலைவர் என்றால்  புரட்சித்தலைவர் ,  தைரியலட்சுமி என்றால் அம்மா ,  கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி தலை சுத்திருச்சு என நிற்கும் காரியக்காரருக்கு  மத்தியில் முரசொலியை கையிலேந்தி பகுத்தறியும் சுயமரியாதைக்காரன் திமுககாரன் ,  நான் திமுககாரன் பொங்கல் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் உதயநிதியின் பதிவுக்கு யார் காலில்  யார் விழுந்தது என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் . 
 

click me!