
இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டதற்கு அக்கட்சிக்குள் ஏற்பட்ட பிணக்கும் பிளவுகளுமே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாககர்கோவிலில் செய்தியாளரகளிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். " பாரம்பரியம் கொண்ட இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருப்பது உள்ளபடி எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்களுக்கு இது தலைகுனிவையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க.வே. காரணம் என்று சொல்கின்றனர். இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதிமுக அம்மா அணியில் இருக்கும் தம்பிதுரையும், புரட்சித் தலைவி அம்மா அதிமுக கட்சியின் ஓ.பன்னீர்செல்வமும், மத்திய அரசுடன் இப்போதும் நட்புறவிலேயே உள்ளனர்.
இரட்டை இலைச்சின்னமும், கட்சியின் பெயரும் முடக்கப்பட்டதற்கு இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசலும், அதிகாரப் போட்டியுமே காரணம்." இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.